5G தரவிறக்க வேகம் பற்றி வெளியான தகவல்
தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமான 5G அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இப்படியிருக்கையில் இதன் வேகமானது பொதுவாக 4G தொழில்நுட்பத்தினை விடவும் 100 மடங்கு வேகம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அமெரிக்காவில் மாத்திரமே உலக அளவில் அதிக வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4G வலையமைப்பினை விடவும் 3 மடங்கு வேகம் கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் அதி உச்ச நேரத்தில் 1815Mbps வேகம் காணப்படுவதாகவும், சுவிட்ஸர்லாந்தில் 1145Mbps வேகத்திலும், தென் கொரியாவில் 1071Mbps வேகத்திலும் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment