Header Ads

சோலார் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்


தற்போது உள்ள சோலார் கலங்களினை விடவும் அதிக வினைத்திறனுடன் மின்சக்தியை பிறப்பிக்க வல்ல தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக புதிய வகை பொருள் (Material) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்னர் 18 சதவீதமாகக் காணப்பட்ட சூரிய கலம் மூலமான மின்சக்தி வினைத்திறன் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக செலவும் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் ரொலிடோ பல்கலைக்கழக ஆய்வாளர்களும், அமெரிக்காவின் சக்திகளுக்கான திணைக்களத்தில் உள்ளவர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இதன் வினைத்திறனை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.